இயக்குநர் நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில், சீதையாக நடித்துள்ள சாய்பல்லவி ராவணன் குறித்துத் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் விவாதங்களை எழுப்பியிருந்தன. ராவணன் முற்றிலும் தீயவன் அல்ல என்ற தொனியில் அவர் பேசியது பேசுபொருளான நிலையில், நடிகர் மற்றும் பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் ராமாயணக் கதாபாத்திரங்கள் குறித்துத் தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சீதை நல்லவள் அல்ல என்று குறிப்பிட்ட அவர், லட்சுமணன் வகுத்த எல்லையைத் தாண்டாமல் இருந்திருந்தால் கடத்தலே நிகழ்ந்திருக்காது என்று வாதிட்டார். மாய மானின் உண்மைத்தன்மையை லட்சுமணன் எடுத்துரைத்தபோதும், அவரிடம் சீதை தவறான எண்ணத்துடன் பேசியதால்தான் லட்சுமணன் அங்கிருந்து சென்றார் என்றும், அதன் காரணமாகவே ராவணனால் அவளைக் கவர முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, ராமரையும் ஒரு கடவுளாகப் பார்க்க முடியாது எனவும், அவரும் தவறுகள் செய்த ஒரு சாதாரண மனிதரே என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறினார். மாபெரும் போருக்குப் பின்னரும் அடுத்தவர் பேச்சைக் கேட்டுத் தனது மனைவியின் கற்பை சந்தேகப்பட்டுத் தீக்குளிக்கச் சொன்ன செயல் நியாயமற்றது எனக் குறிப்பிட்ட அவர், ராமர் மற்றும் சீதை இருவரும் தெய்வீகப் பிறவிகள் அல்ல, மனிதர்கள்தான் என்று ஒரு வேத விற்பன்னர் தன்னிடம் கூறியதாகப் பகிர்ந்த கருத்துகள் தற்போது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் உள்ள பிரபல ஹவேலியில் 10 வயது சிறுமி கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள்…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மெட்ரோ சேவையைத் தொடங்கி வைக்க உள்ள நிலையில், புதிய மான்…
மகாராஷ்டிர மாநிலத்தில், ரயில் சிக்னல் கம்பிகளைத் துண்டித்து ஓடும் ரயிலை நிறுத்தி, ஜன்னல் வழியாகப் பெண் பயணிகளின் தங்க நகைகளைக்…
நவி மும்பையில், கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட மேம்பாலத்தில் நுழைய முயன்ற சரக்கு லாரி ஒன்று பாதுகாப்பு பேரிகார்டில் சிக்கி…
தமிழ் சினிமாவில் தன் ஈடு இணையற்ற நடிப்பால் பெரும் சகாப்தமாகத் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். கதாநாயகனாக மட்டுமல்லாமல் பிற்காலத்தில் பல…
கர்நாடக மாநிலம் கோகர்ணாவிற்கு வார இறுதிச் சுற்றுலா சென்ற பெங்களூரு ஐடி நிறுவனத்தைச் சேர்ந்த 3 ஊழியர்கள் கடலில் சீறிப்பாய்ந்த…