அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருவது, தமிழக அரசியல் களத்தில் “அதிமுக மெல்ல மெல்ல தவெகவில் கரைகிறதா?” என்ற விவாதத்தை பலமாக கிளப்பியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மட்டும் கே.வி. ராமலிங்கம், இசக்கி சுப்பையா, வெல்லமண்டி நடராஜன் என அதிமுகவின் மூன்று முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள நிலையில், இந்த அரசியல் இடப்பெயர்வு இன்னும் ஓயவில்லை என்றே தெரிகிறது.
மேலும் பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தவெகவின் முக்கிய நிர்வாகிகளான செங்கோட்டையன் மற்றும் என். ஆனந்த் ஆகியோருடன் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் வெளியாகும் தகவல்கள், அதிமுக கூடாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வரவிருக்கும் அரசியல் மாற்றங்களுக்கு இது ஒரு பிள்ளையார் சுழியாக இருக்குமோ என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
