நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரியவகை குரங்கான ‘லார் கிப்பான்’ உடன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, சர்ச்சை எழுந்ததும் பின்னர் அதனை நீக்கினார். தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்த குரங்கு இனம் அழிவின் விளிம்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட விலங்காகும். உரிய அனுமதியின்றி இதனை வளர்ப்பது சட்டவிரோதம் என்ற நிலையில், இந்த வீடியோ வைரலானதால் வனத்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். இந்த குரங்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விக்ரமின் சம்பந்தியான ரங்கநாதன் என்பவரின் பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வருவதும், விக்ரம் அங்கு சென்றபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதும் வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த விவகாரத்தின் பின்னணியை அதிகாரிகள் விசாரித்தபோது, ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் கேசவநாதன் என்பவரிடமிருந்து இந்த குரங்கு விக்ரமின் உறவினர் வீட்டிற்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2020-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து மணிப்பூரைச் சேர்ந்த ஒருவர் மூலமாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட இந்த அரியவகை குரங்குகள், தத்தெடுப்பு முறையில் கேசவநாதனை வந்தடைந்துள்ளன. பின்னர், எவ்வித வனத்துறை அனுமதியோ உரிய ஆவணங்களோ இன்றி கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு கிப்பான் குரங்குகளை அவர் சென்னைக்கு விற்பனை செய்துள்ளார் என்பது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து கேசவநாதன் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காத காரணத்தால், ஈரோட்டில் உள்ள அவரது பண்ணையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, அங்கு வளர்க்கப்பட்டு வந்த லார் கிப்பான் குரங்குகள், செர்வால் பூனைகள் மற்றும் அடற்சுருட்டை வால் குரங்குகள் உள்ளிட்ட பல அரியவகை வெளிநாட்டு விலங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் வண்டலூர் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கைது நடவடிக்கையைத் தவிர்க்க ஈரோடு நீதிமன்றத்தில் கேசவநாதன் முன்ஜாமீன் பெற்றுள்ளார். அதேசமயம், நடிகர் விக்ரமிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸ் குறித்த அடுத்தகட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…