இன்றைய காலகட்டத்திலும் மூடநம்பிக்கைகளை பலரும் பின்பற்றி வருகிறார்கள். அப்படி மராட்டியம் மாநிலம் நவி மும்பை பகுதியை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் மாந்திரீகம் உள்ளிட்ட விவகாரங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர் ஆக இருந்துள்ளார். இவரது மனைவியின் சகோதரருக்கு திருமணமாகாமல் இருந்த நிலையில் திருமணத்தடை நீங்குவதற்கு சில சடங்குகளை செய்ய வேண்டும் என்று தன் மனைவியிடம் கூறியுள்ளார்.
அதன்படி தனது மனைவியையும் மாமியாரையும் நிர்வாணமாக பூஜை செய்ய அந்த நபர் வற்புறுத்தியுள்ளார். அவரின் பேச்சைக் கேட்டு இருவரும் அவர் சொன்னதை எல்லாம் செய்த நிலையில் ஆடை இன்றி அவர்கள் பூஜை செய்யும் புகைப்படங்களை எடுத்து அந்த புகைப்படங்களை மனைவியின் குடும்பத்தினர் சிலருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மனைவி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…