ஓசூர் அருகே விஷம் கலந்த உணவை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரில் 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கிராமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜெய் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் பீகாரை சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தினர் வேலை செய்து வந்துள்ளனர். இதனிடையே நேற்று இரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில் அனைவரும் உணவு சாப்பிட்டு உள்ளனர். அப்போது மயக்கம் ஏற்பட்டதால் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
தொடர்ந்து இன்று காலை மயக்கத்துடன் வாயில் நுரை தள்ளியவாறு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில் 5 வயது குழந்தை அயன் என்பவன் மட்டும் உயிரிழந்துள்ளான். மயக்க நிலையில் இருந்த ரிஸ்வான் (40), மனைவி சல்மா (35), முஷாரத் (17), சாகில்(15) ஆகியோருக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உணவு சாப்பிட்டதில் மயக்கம் ஏற்பட்டதாக சிறுவன் கூறிய நிலையில் உணவில் விஷம் கலக்கப்பட்டதாகவும் தெரிகிறது. உணவில் விஷம் கலக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்பத்தில் தகராறு நடந்ததால் விஷம் கலந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தார்களா என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…