காதலனோடு முறையற்ற உறவிலிருந்து பார்த்ததால் ஆண் நண்பர்களோடு சேர்ந்து கணவனை கொன்று அவருடைய உடல் பாகங்களை துண்டு துண்டாக கிரைண்டரில் போட்டு அரைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த டிசம்பர் 15ஆம் தேதி உத்தரபிரதேசம் மாநிலத்தில் பத்ரவா சாலையில் உள்ள வடிகால் அருகே சந்தேகத்திற்கு இடமான நிலையில் ஒரு பை கண்டெடுக்கப்பட்டது. அதில் ஒருவருடைய பாதி தலை துண்டிக்கப்பட்ட உடல் கிடந்தது. தலை மற்றும் கால்களை காணவில்லை. இதனிடையே கடந்த 24ஆம் தேதி கணவர் ராகுல் காணாமல் போனார்.
உடனே அவருடைய மனைவி ரூபி இடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவரிடம் பெற்ற வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் ரூபியின் செல்போனை சோதனை செய்து பார்த்தபோது அவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது. உடனே ராகுல் காணாமல் போன சம்பவத்திற்கும் இந்த கள்ள காதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், ராகுல் தனது மனைவி ரூபியை தனது காதலன் கௌரவுடன் வீட்டுக்குள் பார்த்துள்ளார். இதனால் ராகுலுக்கும் ரூபிக்கும் இடையே சண்டை வந்து ரூபியை கடுமையாக அடித்து மிரட்டி உள்ளார்.
இதனால் ராகுலை கொலை செய்ய திட்டமிட்ட ரூபி தனது காதலனுடன் சேர்ந்து ராகுலை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். பிறகு தனது காதலனுடன் சேர்ந்து கணவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, பாதி உடலை ஒரு பையில் அடைத்து சாலையில் வீசினார். தலை மற்றும் கால் பாகங்கள் வேறொரு பகுதியில் வீசப்பட்டது. நீதிப் பாதியை கிரைண்டரில் அரைத்து அடையாளம் தெரியாமல் ஆகியுள்ளார். இந்த சம்பவத்தில் இறந்தவரின் மனைவி மற்றும் அவருடைய காதலரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…