நான் எனது டாடியிடம் சென்று இருந்தால் ஜெயித்திருப்பேன், ஆனால் கொள்கை பிடிப்பு காரணமாக மோடியிடம் சென்றேன். அம்மா அம்மா என்று இருந்த சேகர்பாபு தற்போது அப்பாவிடம் சென்று விட்டார் என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், SIR படிவத்தை கொடுத்து என்னுடைய பெயர், கணவர் மற்றும் மகளின் பெயர் உள்ளதா என்பதை பார்க்க வந்தேன். எனக்கு மிகவும் ஆச்சரியம். நேற்றும் இன்றும் புதிய வாக்காளர்களை பார்த்தேன். ஒரு புதிய வாக்காளர் மற்றும் 92 வயது வாக்காளரையும் சந்தித்தேன்.
முதல்வர் கிறிஸ்துமஸ் விழாவில் பேசும்போது SIR மூலம் சிறுபான்மை வாக்குகள் நீக்கப்பட இருப்பதாகவும் உங்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம் என்றும் சொல்கின்றார். அவருக்கு எனது கடும் கண்டனங்கள். முதல்வர் தனது உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டு விஷத்தை கட்டிக் கொண்டிருக்கின்றார். சிறுபான்மை மக்களுக்கு அவர் பயத்தை ஏற்படுத்துகிறார். முதல்வர் இந்துக்களை எதிர்ப்பதில் குறியாகவே உள்ளார். தமிழிசைக்கு தமிழக மக்கள் ஏமாற்றம் தான் தந்து கொண்டிருக்கிறார்கள் என்று சேகர்பாபு சொல்கிறார்? அமைச்சர் சேகர்பாபு போல அம்மா கிட்ட இருந்து ஐயா கிட்ட இருந்து அப்பா கிட்ட வரவில்லை.
நான் வெற்றி பெறனும் என்பதற்காக நான் வந்து மோடி கிட்டே தான் இருக்கிறேன். நான் என்னுடைய டாடி கிட்டயே போல, மோடி கிட்ட தான் இருக்கின்றேன். எங்கள் டாடி கிட்ட போயிருந்தால் நான் வெற்றி பெற்ற ஜெயிச்சிருப்பேன். என்னுடைய கொள்கை பிடிப்பு அப்படி. எங்களைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு தார்மீக உரிமையை கிடையாது. அம்மா அம்மா என்ற சொல்லிவிட்டு இப்போது அப்பா பின்னாடி சென்று கொண்டிருக்கிறீர்கள்.
அதன் பிறகு உதயா உதயா அதன்பிறகு இனியா இனியா என்று செல்வீர்கள். நான் தேசம் என்றால் தேசம் என்று சொல்கின்றேன், தோத்தாலும் தேசத்திற்காக நிற்கிறேன் என்று துணிச்சலாக நிற்கின்றேன். நான் நிற்பேன் என்றால் வெல்வேன் வெல்லவில்லை என்றால் தோற்றுவிட்டு மீண்டும் தமிழக மக்களுக்காக நிற்பேன். நான் ஆளுநராக இல்லாமல் வந்து தெருவில் நின்று ஓட்டு கேட்பதை வெற்றி என்று நினைக்கின்றேன். 2026 தேர்தலில் நீங்களா நானா என்று பார்த்துவிடலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் சவால் விட்டுள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…