ருசியான குழம்பில் உப்பு அதிகமாகி விட்டதா?… கவலைப்படாதீங்க… இந்த டிப்ஸ் பாலோ பண்ணா உங்க குழம்பு டேஸ்ட் குறையாம அப்படியே இருக்கும்…!

Spread the love

பொதுவாகவே உப்பு உணவில் சுவையை அதிகரிக்க உதவுகின்றது. ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல உப்பு அதிகமானால் அந்த உணவை வாயில் வைக்க முடியாது. சில நேரங்களில் சமைக்கும்போது நமக்கு தெரியாமல் சற்று அதிகமாக உப்பை போட்டு விடுவோம். அந்த சமயத்தில் என்ன செய்தால் அதிகரித்த உப்பின் சுவையை குறைக்க முடியும் என்பதற்கான டிப்ஸ்களை இதில் பார்க்கலாம்.

உப்பு அதிகமான உணவில் தயிர் சேர்த்தால் அதன் சுவையை சற்று குறைக்க முடியும். தயிரில் உள்ள கிரீமி டேன்ஜினஸ் உப்புத் தன்மையை கட்டுப்படுத்தவும் நீர்த்துப்போகவும் உதவும்.

சூப் மற்றும் குழம்பு வகைகளில் உப்பு சற்று அதிகமானால் கூடுதலாக சற்று தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் சேர்த்தால் உப்பின் சுவை சற்று குறையும்.

உங்கள் சமையல் ரெசிபிக்களில் குறைந்த சோடியம் நிறைந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். குழம்பு வகைகளில் உப்பு அதிகமானால் சாதத்தில் உப்பு போடாமல் சமைத்து விடலாம்.

உப்பு அதிகமான உணவுப் பொருள்களில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் உப்பின் சுவை குறையும். எலுமிச்சையில் உள்ள அமிலங்கள் உப்பு சுவையை நடுநிலையாக்கும்.

ரூக்ஸ் என்பது வெண்ணெய் மற்றும் மாவு சேர்த்து தயார் செய்யப்படும் ஒரு உணவு வகை. உப்பு அதிகம் நிறைந்த உணவில் இதனை சேர்க்கும்போது அதன் சுவையை கட்டுப்படுத்தும். ஒரு குழம்பு அல்லது சாஸ் வகைகளில் அதிக உப்பு இருந்தால் ஒரு ரூக்சை கடாயில் சேர்த்து விடலாம்.

அதேசமயம் மைதா அல்லது கோதுமை மாவை உருண்டையாக பிடித்து உப்பு அதிகமான உணவில் போட்டு சற்று நேரம் கொதிக்க விட்டு பிறகு மாவு உருண்டையை எடுத்து விட்டால் உப்பின் அளவு குறையும்.

அதனைப் போலவே பழங்கால முறைகளில் ஒன்றான உருளைக்கிழங்கை தோல் சீவி உப்பு அதிகம் உள்ள குழம்பில் சில துண்டுகளாக நறுக்கிப்போட்டு சிறிது நேரம் கொதித்த பிறகு அந்த உருளைக்கிழங்கை வெளியில் எடுத்து விட்டால் உப்பின் அளவை உருளைக்கிழங்கு உறிஞ்சி விடும்.

அதேபோல வேக வைத்த சாதம் சிறிதளவு எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து சேர்த்தால் உப்பின் சுவையை கட்டுப்படுத்த முடியும்.

Nanthini

Recent Posts

“ஈரான் தலைவர்களைக் கொல்ல துடித்த இஸ்ரேல்”.. நடுவழியில் புகுந்து அமெரிக்கா செய்த பகீர் காரியம்… வளைகுடா நாடுகளை அதிரவைத்த அந்த ரகசிய மெசேஜ்….!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வந்த சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரை…

5 minutes ago

“ஒரு எம்.எல்.ஏ-வுக்கு ரூ.35 கோடியா?…. மொத்த பட்ஜெட் ரூ.180 கோடி”… தவெக-வை மிரள வைத்த கார்ப்பரேட் டீலிங்…. அம்பலமான ரகசியம்….!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம்…

8 minutes ago

FLASH NEWS: திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு… அம்பலமாகப் போகும் அந்த ரகசியம்….!

திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…

30 minutes ago

BREAKING: தமிழகத்தையே உலுக்கிய அதிரடி வேட்டை… ஒரே நேரத்தில் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு…!

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

34 minutes ago

“நீ செத்துப்போ.. எனக்கு அவன் தான் வேணும்”… கஞ்சா வியாபாரிக் காதலனுடன் சென்ற மகள்… ஒரே ஒரு வார்த்தையால் தாய் எடுத்த விபரீத முடிவு….!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…

56 minutes ago