ரூ.1.5 லட்சம் கூடுதல் செலவு…! நேரம் பார்த்து ஆப்பு வச்சிட்டாங்க…! கடைசி நேரத்தில் ரத்தான விமானம்…! வீடியோ வெளியிட்டு விமர்சித்த பெண்…!!

Spread the love

பாக்டோக்ராவிலிருந்து அகமதாபாத் செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் பலமுறை தாமதப்படுத்தப்பட்டுக் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டதால், சுமார் 50 முதல் 70 பயணிகள் விமான நிலையத்திலேயே நடுத்தெருவில் நிற்கதியாய் விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட பயணியான காஜல் மொஹ்தா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், காலை 6 மணிக்குப் புறப்பட வேண்டிய தங்களது விமானம் முதலில் 8 மணிக்கும், பின்னர் 10 மணிக்கும் தள்ளிவைக்கப்பட்டு, இறுதியில் எவ்வித பொறுப்புணர்வுமின்றி முழுமையாக ரத்து செய்யப்பட்டதாகக் குமுறியுள்ளார்.

விமான நிறுவனத்தின் இந்த அலட்சியத்தால், 4 பேர் கொண்ட தங்களது குடும்பம் அகமதாபாத் சென்றடைய மாற்று விமானத்திற்காக மட்டும் கூடுதலாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவழிக்க நேரிட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இண்டிகோ மற்றும் ஆகாசா உள்ளிட்ட பிற விமான நிறுவனங்கள், தங்களது டிக்கெட் கட்டணத்தை ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை கடுமையாக உயர்த்தி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

https://www.instagram.com/reel/DfwqM0cvKyV/?utm_source=ig_web_copy_link&cplk=NTc4MTIwNjQ2YQ==

விமான நிலையத்தில் சிக்கித் தவித்த பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோதும், ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் எவ்விதப் பொறுப்பையும் ஏற்காமல் தட்டிக்கழித்ததாகக் கூறப்படுகிறது. கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணமும், நேரமும், மன அமைதியும் பறிபோய்விட்டதாகவும், இதற்கு யார் பதில் சொல்வார்கள் என்றும் அப்பெண் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இதுபோன்ற தொடர் விமான ரத்து சம்பவங்களால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இனி யாரும் இந்த நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

கொளத்தூர் இடைத்தேர்தல்…. மீண்டும் களமிறங்குகிறாரா ஸ்டாலின்?….. அறிவாலயத்தில் நடக்கும் ரகசிய ஆலோசனை….!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அங்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க…

2 minutes ago

அய்யோ… போச்சே… சாலை சந்திப்பில் எமன் போல் வந்த கார்… மயிரிழையில் தப்பிய இளைஞர்… நெஞ்சை பதறவைக்கும் விபத்து… வைரலாகும் பகீர் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் நோஹர் பகுதியில் உள்ள ஒரு சாலை சந்திப்பில், இருசக்கர வாகனமும் மாருதி ரிட்ஸ் காரும் மோதும் அளவிற்கு…

8 minutes ago

என்னது… சாலையையே காணோமா?… மொத்தத் தீவை சுற்றிவளைத்த சிவப்புப் நண்டுகள்… போக்குவரத்தை முடக்கிய ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பல கோடி சிவப்பு நண்டுகளின் வருடாந்திர இடப்பெயர்வு 2026 நவம்பர் 13 அன்று தொடங்கியது. பருவமழையின்…

34 minutes ago

கொலையா?… கொள்ளையா?… பைக்கில் லிஃப்ட் கொடுத்த முதியவரை கத்தியால்… குத்திவிட்டு தப்பிய மர்ம நபர்… அதிர்ச்சி பின்னணி என்ன?… ஹைதராபாத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி பகுதியில் 57 வயது முதியவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்ற…

42 minutes ago

அடப்பாவிங்களா… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் சிசுவை… கழுத்தை நெரித்துக் கொன்ற காதல் ஜோடி… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!!

காந்திநகர் மாவட்டத்தின் தேகாம் தாலுகாவிற்கு உட்பட்ட அங்குதலா கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா சோலங்கி (21). திருமணமான இவர் தனது கணவருடன்…

1 மணத்தியாலம் ago

என் மகள்கள் எங்கே?… யாராவது சொல்லுங்க… 40 ஆண்டுகள் தனிமையில் தவித்து… உயிரிழந்த தாயின் சோகக் கதை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற மூதாட்டி, மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில்,…

1 மணத்தியாலம் ago