ரூ.1.5 லட்சம் கூடுதல் செலவு…! நேரம் பார்த்து ஆப்பு வச்சிட்டாங்க…! கடைசி நேரத்தில் ரத்தான விமானம்…! வீடியோ வெளியிட்டு விமர்சித்த பெண்…!!

By Devi Ramu on கார்த்திகை 17, 2026

Spread the love

பாக்டோக்ராவிலிருந்து அகமதாபாத் செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் பலமுறை தாமதப்படுத்தப்பட்டுக் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டதால், சுமார் 50 முதல் 70 பயணிகள் விமான நிலையத்திலேயே நடுத்தெருவில் நிற்கதியாய் விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட பயணியான காஜல் மொஹ்தா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், காலை 6 மணிக்குப் புறப்பட வேண்டிய தங்களது விமானம் முதலில் 8 மணிக்கும், பின்னர் 10 மணிக்கும் தள்ளிவைக்கப்பட்டு, இறுதியில் எவ்வித பொறுப்புணர்வுமின்றி முழுமையாக ரத்து செய்யப்பட்டதாகக் குமுறியுள்ளார்.

விமான நிறுவனத்தின் இந்த அலட்சியத்தால், 4 பேர் கொண்ட தங்களது குடும்பம் அகமதாபாத் சென்றடைய மாற்று விமானத்திற்காக மட்டும் கூடுதலாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவழிக்க நேரிட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இண்டிகோ மற்றும் ஆகாசா உள்ளிட்ட பிற விமான நிறுவனங்கள், தங்களது டிக்கெட் கட்டணத்தை ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை கடுமையாக உயர்த்தி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

   

https://www.instagram.com/reel/DfwqM0cvKyV/?utm_source=ig_web_copy_link&cplk=NTc4MTIwNjQ2YQ==

   

விமான நிலையத்தில் சிக்கித் தவித்த பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோதும், ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் எவ்விதப் பொறுப்பையும் ஏற்காமல் தட்டிக்கழித்ததாகக் கூறப்படுகிறது. கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணமும், நேரமும், மன அமைதியும் பறிபோய்விட்டதாகவும், இதற்கு யார் பதில் சொல்வார்கள் என்றும் அப்பெண் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இதுபோன்ற தொடர் விமான ரத்து சம்பவங்களால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இனி யாரும் இந்த நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.