தீபாவளிப் பண்டிகையைத் தனது இரண்டரை வயது மகளுடன் கொண்டாடுவதற்காகத் தாய் வீட்டிற்குச் சென்ற 35 வயதான இண்டிகோ விமான நிறுவன ஊழியர் வர்ஷா துர்கர், நண்பருடன் வெளியே சென்ற நிலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புனே விமான நிலைய டிக்கெட் கவுன்டரில் பணியாற்றி வந்த வர்ஷா, மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, சனிக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் தனது நண்பரான நிதேஷ் அகர்வால் என்பவருடன் வெளியே சென்றுள்ளார்.
இருவரும் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தின் போண்ட்ரானி வனப்பகுதியில் உள்ள வைங்கங்கா ஆற்றங்கரைக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், சில மணி நேரங்களிலேயே வர்ஷாவுக்கு விபரீதம் நடந்துவிட்டதாக நிதேஷ் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். பதறியடித்துச் சென்ற உறவினர்கள், வர்ஷா ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடுவதைக் கண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தங்களை வழிமறித்துத் தாக்கி பணம் மற்றும் பொருட்களைப் பறித்துச் சென்றதாக நிதேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், வர்ஷா கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், உடன் இருந்த நிதேஷுக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படாததும், அவரது வாக்குமூலத்தில் உள்ள முன்னுக்குப் பின் முரணான தகவல்களும் போலீசாருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இது வழிப்பறி சம்பவமா அல்லது நண்பரே திட்டமிட்டு அரங்கேற்றிய கொலையா என்ற கோணத்தில் நிதேஷைத் தடுத்து வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…