அடுத்தடுத்த சோகம்…! ஒரே நாளில் யானைகள் தாக்கி 5 பேர் துடிதுடித்து பலி…. பீதியில் கிராம மக்கள்…!!

By Devi Ramu on மார்கழி 17, 2025

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காட்டுயானைகள் தாக்குதல்களில் நேற்று ஒரே நாளில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராம்கட் பகுதியில் உள்ள வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் புகுந்த யானை தாக்கியதில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதே மாவட்டத்தில் யானைகளை மிக அருகில் சென்று புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க முயன்ற அமித் குமார் என்ற இளைஞர், யானையிடம் சிக்கி மிதிபட்டுக் இறந்தார்.

மேலும் ராஞ்சி மாவட்டத்தின் ஜிண்டு கிராமத்திற்கு அருகே காட்டில் சென்ற ஒரு நபரை யானை வழிமறித்துத் தாக்கியதில் அவரும் உயிரிழந்தார். வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் வரும் காட்டு யானைகளால் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவங்களைத் தொடர்ந்து, பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்றும் விலங்குகளைத் துன்புறுத்த வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

   

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவற்றை அடர்ந்த காட்டிற்குள் விரட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.