அண்ணே வலிக்குது விட்ருங்க..! பீடி குடிக்க சொல்லி சிறுவர்களை அடித்து… கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்… விருதுநகரில் அதிர்ச்சி…!!

By Soundarya on மார்கழி 17, 2025

Spread the love
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு, வலுக்கட்டாயமாகப் பீடி குடிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். சிறுவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது, அவனைத் தகாத வார்த்தைகளால் பேசி மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

வலியால் அலறிய அந்த சிறுவர்கள் அண்ணே வலிக்குதுன்னே விட்ருங்க என்று கதறுகிறார்கள். இந்தத் தாக்குதல் சம்பவத்தை அந்த இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து காவல்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.