மீண்டும் மோதல்…! சிறுமிகள் உள்பட 5 பேரை மண்வெட்டியால் தாக்கிய கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (40) மற்றும் செல்வின் (35) ஆகிய இருவருக்கும் இடையே இடப் பிரச்சினை தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை, அப்பகுதியில் மண் அள்ளுவது குறித்து மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது.

இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டதில், செல்வின் தரப்பினர் மாரிமுத்து, அவரது மகன் நதீஷ் (20), மகள்கள் நதியா (15), செலிசியா (13), மற்றும் அவரது மாமியார் ஆவுடையம்மாள் ஆகிய ஐந்து பேரையும் மண்வெட்டியால் சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஐந்து பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு முதலில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாரிமுத்து குடும்பத்தாருக்கு மட்டுமல்லாமல், செல்வினுக்கும் காயங்கள் ஏற்பட்டதால், அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த மோதல் குறித்துத் தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திலும், மருத்துவமனையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

7 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago