ஹைதராபாத், தெலுங்கானாவின் நிஜாமாபா மாவட்டத்தில் நந்தித்பேட்டை நகரில் குதவன்பூர் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது . அப்பள்ளியில் சங்கர் எனும் ஆசிரியர் உள்ளார். சம்பவத்தன்று ஆசிரியர் சங்கர் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார். அப்போது சில மாணவர்கள் ஒழுங்கீனத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கோபம் அடைந்த ஆசிரியர் சங்கர் ஒலிங்கின செயலில் ஈடுபட்ட மாணவர்களின் கண் மற்றும் காதுகளில் மிளகாய் பொடியை தூவி உள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் குழந்தைகள் எரிச்சல் தாங்காமல் கத்தி கதறி உள்ளனர்.
பின்பு வீட்டுக்கு சென்றவுடன் பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஆசிரியர் சங்கரிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது அவர்களை அசிங்கமாக திட்டிய அனுப்பி உள்ளார். கோவத்தின் உச்சத்திற்கு போன பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் பள்ளிக்கு வந்து ஆசிரியர் சங்கரை கைது செய்ய வந்துள்ளனர். ஆனால் ஆசிரியர் சங்கர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். நல்லதை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே இது போன்ற தவறுகளை செய்தால் . இவர்களிடம் படிக்கும் மாணவ மாணவிகள் எப்படி ஒழுக்கத்துடன் வாழ்வார்கள். முதலில் ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்.
பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் போது, அதனுடன் சேர்ந்து…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத்…
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…