கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் கரியாலூர் என்ற காவல் நிலையம் உள்ளது. இங்கு யுவராஜ்(32) என்பவர் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். கரியாலூர் காவலர் குடியிருப்பில் தாங்கி தன்னுடைய பணியை மேற்கொண்டு வந்த நிலையில் இவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இவர் தன்னுடைய காவலர் குடியிருப்பில் அத்துமீறி நடந்து கொண்ட தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகிய அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குடிபோதையில் இருந்த யுவராஜ் காவலர் குடியிருப்பில் அரை நிர்வாணமாக நின்று கொண்டு பெண்களிடம் ஆபாச செயல் செய்து அத்துமீறி நடந்துள்ளார்.
அதோடு அந்த வழியாக சென்ற பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களைப் பார்த்து ஆபாசமாக பேசி உள்ளார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. மேலும் அந்த வீடியோவில் திருமணமாகாத ஆண், ஒரு திருமணமான பெண் விருப்பமானால் தனிமையில் இருந்து கொள்ளலாம் என்றும் பேசியிருக்கிறார். இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யுவராஜை நேரில் அழைத்து விசாரணை நடத்தி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
