அடகொடுமையை..! “கடைசியா ஒருமுறை வா பேசலாம்”… காதலிக்கு நடந்த கொடூரம்… விவசாய நிலத்தில் கிடந்த சடலம்… சிக்கிய முன்னாள் காதலன்…!!

By Gayathri on கார்த்திகை 5, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், நீண்ட நாட்களாகப் பழகி வந்த காதலியை வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீரீன் என்பவரும் ஃபிரோஸ் என்பவரும் காதலித்து வந்த நிலையில், அண்மைக்காலமாக அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதனிடையே சமீரீனுக்கு அவரது பெற்றோர் மாற்று இடத்தில் திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத ஃபிரோஸ், கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இறுதியாக ஒருமுறை நேரில் வந்து பேச வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறி சமீரீனைத் தனியாக வரவழைத்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஃபிரோஸ் தனது காதலியை மூச்சுத்திணற அடித்துக் கொன்றுவிட்டு, சடலத்தை ஆள்நடமாட்டமற்ற விவசாய நிலத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததுடன், தலைமறைவாக இருந்த ஃபிரோஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.