தேவர் ஜெயந்தி கிப்ட்.. சிக்குனாங்க ஆதவ் அர்ஜுனா.. தவெக அரசியலில் திடீர் ஹீரோவான சிடிஆர் நிர்மல்குமார்…. இத யாருமே எதிர்பார்க்கலையே..!

By Nanthini on கார்த்திகை 5, 2026

Spread the love

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் தமிழக முதல்வர் விஜய் நேரில் கலந்துகொள்ளாதது, தவெக கட்சியில் புதிய அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழல் காரணங்களால் விஜய் பசும்பொன் செல்வதைத் தவிர்த்துவிட்டு, சென்னை நந்தனம் சிலைக்கு மாலை அணிவித்தார். இருப்பினும், தவெக சார்பில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பசும்பொன்னுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றது.

அதேநாளில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தேவரின் முழுப் பெயரைத் தவிர்த்துவிட்டு “பசும்பொன் முத்துராமலிங்க பெருமகனார்” என்று பதிவிட்டது முக்குலத்தோர் சமூக அமைப்புகள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தலித் வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காகவே தேவர் பெயரைத் தவிர்க்கிறார்கள் என்ற விமர்சனம் வலுப்பெற்றது. இந்தச் சர்ச்சையும், விஜய்யின் கடைசி நேரப் பயண மாற்றமும் சிடிஆர் நிர்மல்குமாருக்கு எதிர்பாராத விதமாக அரசியல் ரீதியில் சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

   

தவெக அமைச்சரவையில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் பிரபு உள்ளிட்ட சிலரே முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்; இதில் பிரபு விழாவில் பங்கேற்காததும் நிர்மல்குமாரின் முக்கியத்துவத்தை உயர்த்தியது. வேறு வழியின்றி தேவர் சமூக அமைப்புகள் சிடிஆர் நிர்மல்குமாரிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக்கொண்டு அவர் தென் மாவட்ட சமூக அமைப்புகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

   

இந்தத் திடீர் அரசியல் நகர்வுகள் மற்றும் சமூகத்தினரின் ஆதரவு மூலமாக, சிடிஆர் நிர்மல்குமார் தென் மாவட்ட அரசியலில் ஒரு முக்கிய சக்தி மையமாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. தவெகவின் உள்மண்டல அரசியலில் இந்த நிகழ்வு இவருக்குப் புதிய பலத்தைக் சேர்த்துள்ளதோடு, கட்சியின் எதிர்காலத் திசையையும் நிர்ணயிக்கும் முக்கியக் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.