திடீர் திருப்பம்…. பேரவையில் CM ஸ்டாலின் அதிரடி… KN நேரு FIR இணையத்தில் லோடு… திமுகவுக்கு அடுத்த ஷாக்….!

By Nanthini on புரட்டாதி 7, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எஃப்.ஐ.ஆர் நகலைப் பதிவேற்றியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. நகராட்சி நிர்வாக ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சனிக்கிழமை அன்று சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர சோதனை நடத்தியது.

சோதனை முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் எஃப்.ஐ.ஆர் நகல் இணையதளத்தில் பதிவேற்றப்படாதது பல்வேறு சந்தேகங்களையும், அரசியல் ரீதியான யூகங்களையும் எழுப்பி வந்தது. இந்நிலையில், பேரவையில் இதுகுறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவேற்றப்பட்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.