“25 வருஷ அனுபவம் இருக்கு!”… அவையில் திடீரென ஆவேசப்பட்ட நிதியமைச்சர்…! காரணத்தைக் கேட்டு அதிர்ந்த எம்.எல்.ஏ-க்கள்… காரசார விவாதம் வைரலாகும் வீடியோ…!!

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, மதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழுப்பிய விமர்சனங்களுக்கு, மாநில நிதியமைச்சர் நா. மரிய வில்சன் கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்தார். அவையில் சிலர் உருவக்கேலி, சாதி மற்றும் பெண்கள் தொடர்பான விவகாரங்களைத் தொடர்ந்து பேசி வருவதாகவும், தற்போது அது மொழி ரீதியான அரசியலாகவும் மாறியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வீணான விமர்சனங்களை முன்வைப்போருக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்பதை உறுதியாக உணர்த்தும் வகையில் அவரது இந்த உரை அமைந்திருந்தது.

நிதியமைச்சர் தனது உரையில், தான் ஒரு கூடைப்பந்து வீரர் என்றும், ஆட்டத்தில் எப்போது தற்காப்பு முறையில் ஆட வேண்டும், எப்போது தாக்குதல் முறையில் ஆட வேண்டும் என்ற இரண்டு யுத்திகளும் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் ஆவேசமாகக் குறிப்பிட்டார். தன்னை நோக்கிச் சத்தமிட்டால், தானும் அதே பாணியில் குரலை உயர்த்துவேன் என்று எச்சரித்த அவர், கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக கல்வித்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட தனது அன்றாடத் தகவல் தொடர்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்ததாகச் சுட்டிக்காட்டினார். மேலும், அவையில் உறுப்பினர்கள் சம்பந்தமில்லாத கருத்துகளைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மரிய வில்சன், தங்கள் கட்சியின் தலைவர் எப்போதுமே ‘செயல்’ என்பதற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகக் குறிப்பிட்டார். கிறிஸ்தவ மதம் தமக்கு அன்பையும், அமைதியையும், இரக்கத்தையுமே கற்றுக்கொடுத்துள்ளதாகவும், அதுவே தங்களது மொழி என்றும் அவர் விளக்கினார். மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்வோருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரோ அல்லது அவரது மகனோ நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்ற கடுமையான அரசியல் விமர்சனத்தையும் அவர் அவையில் முன்வைத்தார்.

Gayathri

Recent Posts

“கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி சித்திரவதை…” முதியவரை அடித்து கொடுமைப்படுத்தி கொன்ற கும்பல்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

பஞ்சாப் மாநிலம் பாசில்பூர் மாவட்டத்தில் வட்டிப் பணத் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு, கட்டி வைத்து அடித்து கொடூரமாக…

13 minutes ago

LPU வளாகத்தில் பாதுகாப்பு எங்கே?… “அசால்ட்டா தூக்கிட்டு போய்ட்டாங்க!”… வைரலாகும் ஷாப்பிங் சென்டர் சிசிடிவி வீடியோ…!!

LPU ஷாப்பிங் சென்டரில் அமைந்துள்ள 'O' மொபைல் கடையில் சமீபத்தில் நடந்த திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள…

19 minutes ago

“3 பிள்ளைகள் இருந்து என்ன பயன்…?” பள்ளி மதிய உணவை சாப்பிட்டு பசியை போக்கிய தம்பதி… “அதிகாரிகளிடம் கெஞ்சி…” சோகத்தில் உயிரை விட்ட தம்பதி…. வைரலாகும் வீடியோ…!!

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் நாராயணேகட் மண்டலத்திற்குட்பட்ட சாப்தா கே கிராமத்தைச் சேர்ந்த முங்கா நர்சாரெட்டி (88) மற்றும் அஞ்சம்மா…

27 minutes ago

உஷார்..! ரேஷன் கார்டு இருக்கா?… அரசு கொடுத்த கடைசி 90 நாள் கெடு… தப்பிக்க ஒரே வழி இதுதான்… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!

கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காத சுமார் 1.58 கோடி குடும்ப அட்டைகளை அக்டோபர் 1-ஆம் தேதி முதல்…

31 minutes ago

GPay, PhonePe_க்கு குட்பை?… நாளை முதல் வேலை செய்யாதா? வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு… டிஜிட்டல் இந்தியாவுக்கு விழுந்த பலத்த அடி….!!

மத்திய அரசின் புதிய யுபிஐ பரிவர்த்தனை கட்டண விதிமுறைகளை எதிர்த்து, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும்…

42 minutes ago