தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் நாராயணேகட் மண்டலத்திற்குட்பட்ட சாப்தா கே கிராமத்தைச் சேர்ந்த முங்கா நர்சாரெட்டி (88) மற்றும் அஞ்சம்மா (85) என்ற முதிய தம்பதியினருக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலம் மற்றும் வீட்டை அவர்களின் மகன்களான சித்தாரெட்டி, கிருஷ்ணாரெட்டி மற்றும் சங்காரெட்டி ஆகிய மூவரும் பிரித்துக் கொண்டுள்ளனர்.
சொத்தைப் பிரித்து வாங்கிய அன்றிலிருந்தே பெற்ற தாயையும் தந்தையையும் கண்டுகொள்ளாமல் மகன்கள் நடுத்தெருவில் விட்டுச் சென்றுள்ளனர். முதிய வயது மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சமைக்கக் கூட முடியாத நிலையில், அந்த முதிய தம்பதி அரசுப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை உண்டு பசி ஆறி உயிர் வாழ்ந்து வந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்திற்குப் பிரித்துக் கொடுத்த நிலத்தில் இருந்து ஆளுக்கு ஒரு ஏக்கர் அல்லது இரண்டு ஏக்கர் நிலத்தை மீட்டுத் தருமாறு காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் அவர்கள் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உண்பதற்கு உணவு கூட இல்லாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்த முதிய தம்பதி, இறுதியாக அருகிலிருந்த விவசாயக் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து முதியவரின் பேரன் திருப்பதிரெட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பெற்றோரைக் கைவிட்ட கொடூர மகன்கள் மீது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள பாஸ்வான் டோலா அம்னி கிராமம், மான்சி காவல் சரகம் பகுதியில் இயங்கி வரும்…
ஈராக் நாட்டின் கிர்குக் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், காரில் எரிபொருள் நிரப்பிவிட்டுப் பணம் கொடுக்காமல் தப்பிக்கும் நோக்கில்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகரபாவி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், முதலாமாண்டு…
மைசூரு சாலை அஞ்சேபால்யா பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவமனைக்கு பின்புறம், திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் 60 வயதான நாகராஜு…
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டம் சௌடுப்பல் மண்டலத்திற்குட்பட்ட துப்பனபேட் கிராமத்தில், பணப் பேராசை மற்றும் கடன் தொல்லை காரணமாகச் சொந்தப்…
பெங்களூருவின் கக்கடாசபுரா அடுத்த மல்லேஷ்பால்யா பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில், புதன்கிழமை காலை சுமார்…