“நீ கொஞ்சம் வெளிய வா…” கிளாஸ் ரூமில் இருந்து வெளியே அழைத்து வந்து… மாணவரை குத்தி கொலை செய்த கொடூரம்…. கல்லூரி வளாகத்தில் அரங்கேறிய பயங்கரம்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகரபாவி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், முதலாமாண்டு பி.காம் மாணவர் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகரபாவியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்த யோகேஷ் (19) என்ற மாணவர், புதன்கிழமை வகுப்பறையில் பாடம் கவனித்துக் கொண்டிருந்தபோது, அவரது நண்பர் ஒருவர் அவரை வெளியே அழைத்துள்ளார். கல்லூரி வளாகத்திற்கு வெளியே வந்தபோது, அங்கு இரு குழுக்களாகப் பிரிந்திருந்த மாணவர்களுக்கிடையே திடீரெனக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

இந்த மோதலின் போது, கும்பலில் இருந்த நபர் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யோகேஷின் உடலில் சரமாரியாகக் குத்தியுள்ளான். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த யோகேஷ், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 4 முதல் 5 பேருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

திமுகவுடன் கூட்டணியா?….. அதிமுக ரகசியத்தை போட்டுடைத்த டிடிவி தினகரன்…. அலறும் தமிழக அரசியல் களம்…..!

மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யையும் அவரது ஆட்சியையும்…

4 minutes ago

ஓட்டுக்கு ரூட் போட்ட தவெக?…. “மக்களே என்கிட்ட சொல்லிட்டாங்க”…. மதுராந்தகத்தில் அதிர்ச்சி திருப்பம்… சி.பி.எம் சண்முகம் போட்ட குண்டு….!

மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் அதிகளவில் பணம் கொடுத்து வருவதாக அப்பகுதி மக்களே தன்னிடம் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

13 minutes ago

நடுரோட்டில் பயங்கரம்…! சீட் பெல்ட் அணியாததால் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட தாய், மகன்… இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் நடைபெற்றதாகக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கொடூரச் சாலை விபத்து வீடியோ ஒன்று இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும்…

15 minutes ago

BREAKING: போக்சோ வழக்கில் கைதான ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…. சென்னை கமிஷனர் அதிரடி உத்தரவு….!

போக்சோ சட்டத்தின்கீழ் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர்…

19 minutes ago

பாகிஸ்தான் பொருட்கள் எப்படி உள்ளே வந்தன…? உரிமமின்றி இயங்கிய கடைகளுக்கு அதிரடி சீல்… ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்… வைரல் வீடியோ…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஹபீப் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாமப்பள்ளி அரசு மருத்துவமனை அருகே உள்ள அழகுசாதனப் பொருட்கள்…

27 minutes ago

செம ‘மாஸ்டர் பிளான்’… தோண்டத் தோண்ட எலும்புக்கூடு… 4 வருடத்திற்குப் பின் வெடித்த உண்மை… 3 கொலைகள் செய்த சைக்கோ தம்பதி சிக்கியது எப்படி?…!!

2022-ம் ஆண்டு கொரோனா பேரிடர் நிலவிய நெருக்கடியான காலகட்டத்தில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் திடீரென…

34 minutes ago