குரங்கு பொம்மை திரைப்படம் மூலம் கவனம் இருத்தவர்தான் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகந்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தன்னுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும் கதை தான் மகாராஜா.
கதை வழக்கமானதாக இருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு நித்திலன் சுவாமிநாதன் திரைக்கதை எழுதியிருந்த விதமே படத்தை பிளாக் பஸ்டர் வெற்றியாக மாற்றியது திரை துறையை சேர்ந்த பலரும் மகாராஜா படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான திரைக்கதை, கிளைமாக்ஸ் ட்விஸ்ட், விறுவிறுப்பான கதைக்களம் என படம் வேற லெவலில் இருந்தது. உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.
இந்த நிலையில் மகாராஜா திரைப்படம் தற்போது சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. மகாராஜா திரைப்படம் சீனாவின் 40000 இறங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது சீன மக்களிடையே இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீனாவில் ரிலீஸ் ஆன 4 நாட்களில் 2.0 படத்தின் லைப் டைம் வசூல் சாதனை முறியடித்து 33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
மகாராஜா திரைப்படத்திற்கு முன் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படம் பத்தாயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரஜினியின் எந்திரன் 2 திரைப்படம் 2019 ஆம் வருடம் செப்டம்பரில் 48,000 திரைகளில் ரிலீஸ் ஆனது. சீனாவில் ரிலீஸ் ஆன முதல் தமிழ் படம் மெர்சல் தான். 2019 வருடம் டிசம்பர் மாதம் இந்த படம் சீனாவில் வெளியானது.