தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நிற்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் க்கு முந்தைய வியாபாரத்தில் 1085 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா 2 படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் 38 கோடிக்கு மேல் சென்சேஷனல் வசூல் செய்துள்ள நிலையில் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. புஷ்பா முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து தற்போது 2ம் பாகம் மாஸாக தயாராகி இன்று டிசம்பர் 5 வெளியாகிவிட்டது.
படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ஐதராபாத்தில் புஷ்பா 2 படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ரேவதி (39) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ஐதராபாத் திரையரங்கில் புஷ்பா-2 சிறப்பு காட்சி காண வந்த பெண் நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவாகரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் , அவரது குழுவினர் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.