சீரியல் நடிகர் நேத்ரன் மரணத்திற்கு காரணம் இதுதான்… ஷாக்கிங் தகவலை சொன்ன சகோதரர்..!

By Soundarya on டிசம்பர் 5, 2024

Spread the love

மருதாணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நேத்திரன். இவர் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியவர். இவர் சீரியல் நடிகை தீபாவை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களும் சீரியல்களில் தான் நடித்து வருகிறார்கள். நேத்ரன் ஒரு சில படங்களிலும் துணை நடிகராக நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கேன்சர் இருப்பதாக சமீபத்தில்அவருடைய மகள்  அபிநயா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

#image_title

இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகினர். அப்பாவுக்கு கேன்சர் நோய் என்று தெரிந்தது மருத்துவமனையில் சேர்த்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மகள்கள் அபிநயா மற்றும் அஞ்சனா இருவரும் தவிர்த்து வந்துள்ளனர். ஆனால் அவர்களுடைய அனைத்து முயற்சிகளும் வீணாக போய்விட்டது.

   
   

#image_title

 

இரண்டு நாட்களுக்கு முன்பாக நேத்ரன் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். தந்தையின் மரணம் மீளா துயரில் இரு மகள்களையும் ஆழ்த்தியுள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் நேத்ரன் மறைவுக்கு சமூக வலைதளங்கள் மூலமாகவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். சின்னத்திரை ரசிகர்களும் நேத்ரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நேத்ரன் சகோதரர் அளித்துள்ள பேட்டியில், இறந்து போன என் தம்பியின் நிஜ பெயர் முருகன். அவன் சின்னத்திரை நடிகராக இருந்தார். அவன் அசால்ட்டா விட்டுட்டான். அவன் வயித்துல கட்டி இருந்துச்சி ஆனா அவன் ஆறு வருசமா அதை அப்படியே வச்சிட்டு இருந்துட்டான். அதான் கேன்சரா மாறிட்டு. அவன் ஹாஸ்ப்பிட்டல்ல போயி பார்த்திருந்தா சரி பண்ணிருக்கலாம். கேன்சர் வந்து நம்ம உடம்புலேயே இருக்கு. அதனால் உடனடியா போயி ஹாஸ்ப்பிட்டல்ல போயி காட்டிரனும். எப்பவுமே அசால்ட்டா இருக்காதீங்க என்று பேசியுள்ளார்.