தமிழ் சினிமாவில் இன்று காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் கலக்குபவர் தான் சூரி. மதுரையை சேர்ந்த இவருடைய இயற்பெயர் ராமன். ரஜினியின் தீவிர ரசிகரான இவர் தளபதி படத்திற்குப் பிறகு அந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரமான சூர்யா என்பதை தன் பெயராக மாற்றிக் கொண்டார். பிறகு சினிமா ஆசையில் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தார். ஆரம்பத்தில் பட வாய்ப்பு தேடி ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து உள்ளார். ஒரு கட்டத்தில் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட இவருக்கு வயிற்று பிழைப்புக்காக சினிமாவில் செட் அமைக்கும் பணி கிடைத்த நிலையில் அதையும் செய்து வந்தார்.
அப்போது சில இயக்குனர்களிடம் சூரி வாய்ப்பு கேட்ட நிலையில் லிங்குசாமி தன் தயாரிக்கும் படங்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கி வந்தார். அதன் பிறகு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்தத் திரைப்படத்தில் பரோட்டா காமெடி மூலம் இவர் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திற்கு பிறகு பரோட்டா சூரி என்று அடையாளம் இவருக்கு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து விஜய், அஜித் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் காமெடியனாக வலம்.அதன் பிறகு விடுதலை படத்தின் கதையை சொல்லி சூரியை ஹீரோவாக்கி வெற்றிமாறன் அழகு பார்த்தார். இந்த திரைப்படம் சூரிக்கு சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தின் மூலம் அனைவரும் சூரியை ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர்.
இந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து சூரிக்கு ஹீரோவாக நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. அதன்பின்னர் கொட்டுக்காளி படத்தில் நடித்தார்.தற்போது நடிகர் சூரி தனது கைவசம் ஏழு கடல் ஏழுமலை என்ற திரைப்படத்தை வைத்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளதாக தகவல். ஐஸ்வர்யா லட்சுமி கட்டா குஸ்தி படத்தில் நடித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்களோ கட்டாகுஸ்தி படத்தில் பலரையும் பந்தாடியிருப்பார். அதனால் சற்று அவரிடம் உஷாரா இருங்க என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.