பாலிவுட்டில் கால் பாதிக்கும் நடிப்பு அரக்கன்.. இளம் நடிகையை வளைத்துப்போட ரத்தின வேலு…!

By Soundarya on மார்கழி 5, 2024

Spread the love

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பகத் பாஸில். கேரளாவை சேர்ந்த இவர் இயக்குனர் பாசிலின் மகன் ஆவார். மேலும் இயக்குனர் பாஸின் அவர்கள் தமிழில் மிகவும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆனால் பகத் பாஸில் முதன் முறையாக மலையாள மொழி திரைப்படத்தின் மூலமாக தான் அறிமுகமானார். மலையாளத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அதனை தொடர்ந்து தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ்.

   

தெலுங்கு மொழியில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்த அசதி இருக்கின்றார். சமீபத்தில் வெளியான கமலஹாசன் நடிப்பில் வந்த விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பு மிரள வைத்தது.

   

 

அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்து மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதிலும் புஷ்பா திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த திரைப்படம். தற்போது புஷ்பா-2 படத்தில் நடித்து மிரட்டியிருப்பார்.

இந்நிலையில், அடுத்ததாக பகத் பாசில் நடிக்கப்போகும் படம் குறித்து தற்போது ஒரு முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பகத் பாசில் பாலிவுட்டில் அனிமல் பட புகழ் நடிகையான திரிப்தி டிம்ரியுடன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இம்தியாஸ் அலி இயக்க இருக்கிறார். இதன் மூலம் பகத் பாசில் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.