2025 ஆம் வருடம் வெளியாகப்போகும் பெரிய நடிகர்களின் படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லைக்கா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அஜர்பைஜானில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் மீதம் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ளது.இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரதீர சூரன் திரைப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் துஷாரா விஜய் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படமும் 2025 பொங்கலுக்கு களமிறங்க உள்ளது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
வேட்டையன் படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படமும் 2025 ஆம் வருடம் வெளியாகிறது.
தக்லைப் திரைப்படம் இந்தியா முழுவதும் மீண்டும் அனல் பறக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு கமல் மணிரத்தினம் கூட்டணி ஒரு உதாரணமாக இருக்கிறது. இந்த படத்தில் சிம்பு திரிஷாநடித்துள்ளனர். இந்த படமும் 2025ஆம் வருடம் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 69. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தின் பூஜைகள் முடிவடைந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படமும் 2025 ஆம் வருடம் வெளியாகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யா மற்றும் பூஜா எட்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காதல் கலந்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ஆக உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.