upi

GPay, PhonePe உபயோகப்படுத்துப்பவர்களா நீங்க… அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க…

By admin on மார்கழி 31, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் வெளியில் ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றால் கையில் பணமே தேவையில்லை. போன் மட்டும் இருந்தால் போதுமானது. தற்போது அனைவரும் UPI பரிவர்த்தனை மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள். எங்கு சென்றாலும் கையில் பணம் கொடுப்பதை விட UPI மூலம் பணம் செலுத்துவதை மட்டுமே விரும்புகிறார்கள். ஆனால் வருகிற ஜனவரி 1 முதல் இந்த UPI பரிவர்த்தனைகளில் பல மாற்றங்கள் நிகழ்கிறது. அது என்னவென்று இனி காண்போம்.

   

UPI இன் புதிய விதிகள் வருகிற ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இதை ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி UPI பரிவர்த்தனையில் வாலட் மூலம் பணம் செலுத்துவதற்கான உச்சவரம்பை அதிகரித்து இருக்கிறது. புதிய விதிகளின்படி UPI 123 Pay பயன்படுத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு பதிலாக பத்தாயிரம் ரூபாய் வரை பண பரிவர்த்தனை செய்யலாம்.

   

இந்த உச்சவரம்பு அதிகரிப்பதால் GPay, PhonePe, Paytm போன்றவற்றின் மூலமாக மக்கள் எளிதாக பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும். ஆனால் இந்த புதிய விதையை முழுவதுமாக பயன்படுத்த குறிப்பிட்ட வாலெட் KYC நடைமுறையை முடித்திருக்க வேண்டும். வாட்டுடன் ஆப் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். முதலில் UPI மூலம் பணம் செலுத்துவதற்கு முதலில் ஒப்புதல் வழங்கப்படும். பிறகு தான் யுபிஐ செயலிக்கான அணுகலை பெற முடியும்.

 

அதுமட்டுமில்லாமல் UPI மூலம் பணம் செலுத்த OTP அவசியம் என்ற விதியை நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஜனவரி 1 முதல் அமல்படுத்துகிறது. டிஜிட்டல் மோசடிகள் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருவதால் மக்கள் தங்களது பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த விதிகளை கொண்டு வந்திருக்கிறது.

UPI 123 Pay இல் பணம் செலுத்த விரும்பும் பயனர்கள் நான்கு விருப்பங்களை பெறுவார்கள். IVR எண், கால் அழைப்புகள், OEM மற்றும் ஒலி அடிப்படையிலான தொழில்நுட்பம் OTP அடிப்படையில் ஆன சேவை ஆகியவை இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதிகள் மூலம் மக்கள் பரிவர்த்தனை செய்யும்போது நேரமும் மிச்சமாகும் பணமும் பாதுகாப்பாக இருக்கும். UPI 123 Pay- இணையம் இல்லாமல் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.