மலையாளத் திரை உலகில் சினிமாவிலும் டிவி சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்த நடிகர் தான் நடிகர் திலீப் சங்கர். எர்ணாகுளத்தை சேர்ந்தவர் திலீப் சங்கர்… பல பிரபலமான மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். ‘அம்மா இறைத்தே’, ‘பஞ்சாக்னி’, ‘சுந்தரி’ போன்ற டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர்.. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே கேரளாவில் உள்ளது. இதைத்தவிர சில திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் திலீப் சங்கர் நடித்துள்ளார்.
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருந்தார். இரண்டு நாட்களாக அறையிலேயே இருந்து அவர் வெளியே வரவில்லை என்று கூறப்படுகின்றது. அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு சந்தேகம் வர பலமுறை கதவை தட்டி பார்த்தும் திலீபிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
இதனால் ஹோட்டல் ஊழியர்கள் தாங்களாகவே கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்த நிலையில் அங்கு திலீப் சங்கர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். 47 வயதான மலையாள நடிகர் திலீப் சங்கர் ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த சம்பவம் தற்போது மலையாள திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.