மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட பா.ரஞ்சித், கலையரசன்.. வைரலாகும் வீடியோ..!

By Nanthini on மார்கழி 30, 2024

Spread the love

கலையரசன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். இவரது முழு பெயர் கலையரசன் ஹரிகிருஷ்ணன் என்பதாகும். இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாள திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். எஸ்ஆர்எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையில் பட்டம் பெற்ற கலையரசன் 2010 ஆம் ஆண்டு அர்ஜுனன் காதலி படத்தில் தோன்றியதன் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டு நந்தலாலா, 2012 இல் முகமூடி, அட்டகத்தி 2013இல் மதயானை கூட்டம் போன்ற திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் கலையரசன்.

Kalaiyarasan in a true story | உண்மை சம்பவம் கதையில் கலையரசன்

   

அடுத்ததாக 2014 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் திருப்புமுனையை பெற்றார் கலையரசன். மெட்ராஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து சினிமாவில் பல வாய்ப்புகளை பெற்றார் கலையரசன். தொடர்ந்து அன்பே, உறுமீன், கபாலி, முப்பெரிமாணம், தானா சேர்ந்த கூட்டம், ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழகத் தலைவன், 10 தல, hotspot போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் கலையரசன்.

   

Simbu,சிம்புவின் படத்தில் இணைந்த நடிகர் கலையரசன்! - kalaiyarasan has teamed  up with simbu for new film - Samayam Tamil

 

இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அனைவரின் பாராட்டுகளை பெற்றார். இந்த நிலையில் கலையரசன் இயக்குனர் பா. ரஞ்சித்துடன் இணைந்து மார்கழியில் மக்கள் இசை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Ramshan பதிவைப் பகிர்ந்துள்ளார் (@ramshan__)