சத்யராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகராவார். இவரது இயற்பெயர் ரங்கராஜ் என்பதாகும். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர் சத்யராஜ். படிப்பை முடித்த பின்பு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தினால் சென்னைக்கு வந்தார். ஆரம்பத்தில் வில்லனாக தனது நடிப்பை தொடங்கியவர் சத்யராஜ். அதற்கு பிறகு தான் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். எம்ஜிஆரின் தீவிர ரசிகர் இவர். பெரியார் வழியை பின்பற்றுபவர் சத்யராஜ்.
1978 ஆம் ஆண்டு சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சத்யராஜ். தொடர்ந்து ஒரு நாலைந்து படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கு பிறகு சத்யராஜின் கல்லூரி கால நண்பர் பிரபல இயக்குனர் மணிவண்ணன் சினிமாவிற்குள் வந்தார். பிறகு அவர் சத்யராஜை வைத்து பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். நூறாவது நாள், காக்கி சட்டை, பகல் நிலவு, மிஸ்டர் பாரத், கடலோர கவிதைகள் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சத்யராஜ்.
2000 காலகட்டத்திற்கு பிறகு விஜய் அஜித் சூர்யா தனுஷ் ஆகியோர் வருகையால் சத்யராஜ் மார்க்கெட் சரிந்தது. அதற்கு பிறகு சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சிறந்த குணச்சித்திர நடிகராகவும் இருக்கிறார் சத்யராஜ். “பாகுபலி” திரைப்படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பான் இந்தியா நடிகராகவும் இருக்கிறார் சத்யராஜ். தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சத்யராஜ். இந்நிலையில் சத்யராஜ் அளித்த பேட்டி ஒன்றில் தான் மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வந்து விட்டதாக கூறியிருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால் நானும் முதலில் கோயில் கோவிலாக சுற்றுவேன். மொட்டை போடுவது நேர்த்திக்கடன் செய்வது போன்றவற்றை செய்தேன். இது போன்ற மூடநம்பிக்கைகள் நிறைய இருப்பதால்தான் நம் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நமது அன்றாட பணிகள் தடைபடுகிறது. நான் நாத்திகனா மாறி பல வருஷமா ஆச்சு. நாத்திகனா மாறினதுக்கு அப்புறம் தான் நான் ரொம்ப ஜாலியா இருக்கேன் என்று ரகசியத்தை உடைத்து பேசியிருக்கிறார் சத்யராஜ்.