ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த அனிதா பிந்த் என்ற பெண், தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த சக்ரதார்பூர் காவல்துறையினர், அந்த வீட்டைச் சோதனையிட்ட போது வீட்டிற்குள் பதுங்கியிருந்த உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைப் பிடித்துக் காவலில் எடுத்தனர்.
கொல்லப்பட்ட அனிதா பிந்திற்கும் அந்த வாலிபருக்கும் என்ன தொடர்பு, எந்த நோக்கத்திற்காக இந்தக் கொடூரக் கொலை அரங்கேற்றப்பட்டது என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பெண் அதிகாரி ஒருவர் வீட்டின் உள்ளேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
