“எல்லாம் போச்சே… வாழ்நாள் உழைப்பு…” கண்முன்னே இடித்து தரைமட்டமாக்கப்பட்ட கட்டிடம்…. கதறி அழுத தொழிலதிபர்…. 11 மாத போராட்டத்திற்கு பிறகு துயரம்…!!

By Devi Ramu on புரட்டாதி 18, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரபல மத்திய சந்தைப் பகுதியில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து தொழிலதிபர் ஒருவர் கட்டிய வீடும் வியாபாரக் கடையும் அதிகாரிகளால் புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

தனது சொத்துக்களைக் காப்பாற்ற அந்த தொழிலதிபர் கடந்த 11 மாதங்களாகத் தொடர் போராட்டங்கள் மற்றும் தர்ணாக்களில் ஈடுபட்டு வந்தார். உள்ளூர் எம்பிக்கள் மற்றும் ஆளும் பாஜக தலைவர்கள் பலரும் உறுதியளித்த போதிலும், சட்ட விதிகளுக்கு முன் அவர்களால் எந்த உதவியும் செய்ய முடியாமல் போனது.

   

கண்முன்னே தங்களின் வாழ்நாள் உழைப்பு இடிந்து விழுவதைக் கண்டு அந்தத் தொழிலதிபரும் அவரது குடும்பத்தினரும் நிலைகுலைந்து அலறித் துடித்துக் கதறினர். இந்த இதயத்தை நொறுக்கும் சோகச் சம்பவத்தைக் கண்டு அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்து போயினர்.