இப்படி பண்ணிட்டீங்களே…! குடும்பத்தின் முதல் மருத்துவர்…! வாலிபர்களின் மதுபோதை ஆட்டத்தால் முடிந்த வாழ்க்கை… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

Spread the love

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்து வந்த 28 வயதான டாக்டர் பிரியங்கா, கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி வணிக வளாகம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்குப் பாதுகாப்பாளர்களுடன் தகராறில் ஈடுபட்டுவிட்டு மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்த சுவரவரபு துஷ்யந்த் மற்றும் ஆண்ட்ரூ ஜோசப் எட்வர்ட்ஸ் ஆகிய இருவரும், பிரியங்காவின் ஸ்கூட்டர் மீது காரை மோதி அவர் மீது ஏற்றிச் சென்றுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் தீவிர முயற்சித்தும் அவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தங்களின் பெரிய குடும்பத்திலேயே முதல் மருத்துவரான மகளை இழந்து பெற்றோர் கண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பி ஓடிய இருவரையும் பொலிஸார் கைது செய்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கக்கோரி மருத்துவ மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“இப்படி ஆகிருச்சே…! கஷ்டப்பட்டு சேர்த்த பணம்…” வீட்டில் ஒளித்து வைத்த பணத்தை கடித்து குதறிய எலிகள்…! கதறும் குடும்பத்தினர்…. பகீர் சம்பவம்…!!

தன் வாழ்நாளின் கடின உழைப்பால் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது என நினைத்துப் பூட்டி…

4 minutes ago

சின்ன பையன் பண்ற வேலையா இது…? “என்னை பிளாக்மெயில் பண்றான்…” 16 வயது சிறுமியை பலமுறை சீரழித்த சிறுவன்… பகீர் சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 17…

24 minutes ago

மயக்க ஸ்ப்ரே அடித்து துணிச்சலான கொள்ளையா…? தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. 3 மாடியில் சல்லடை போட்டு தேடி பணம், நகை அபேஸ்…. வைரலாகும் CCTV காட்சிகள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜயநகர் பகுதியில் அமைந்த 3 மாடி வீடொன்றில், வீட்டின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் ஆழ்ந்த…

38 minutes ago

அதிரடி ஆக்‌ஷனில் முதல்வர் விஜய்… தூக்கப்படப்போகும் முக்கிய அமைச்சர்கள்?… கசிந்தது உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்…..!

தமிழக அரசியலில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் விஜய்…

43 minutes ago

FLASH: வங்க கடலில் உருவானது புதிய புயல்… சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது மேலும் வலுவடைந்து புதிய புயலாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வத்…

47 minutes ago

ரூ.10,000 சம்பள பாக்கி… ரூ.24 கோடியை சாம்பலாக்கிய அக்கவுண்டன்ட்…. குஜராத்தில் அரங்கேறிய பயங்கரம்….!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட்டில், கடந்த 9-ஆம் தேதி நள்ளிரவில் திடீரெனப் பயங்கர…

53 minutes ago