“சிரித்த முகமே வினை: 26 வயது பெண் இன்ஜினியருக்கு நேர்ந்த கொடூர முடிவு”…. 18 வயது மாணவன் செய்த பகீர் செயல்….!

Spread the love

பெங்களூருவில் 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர், 18 வயது மாணவனின் பாலியல் வக்கிரத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்களூருவைச் சேர்ந்த அந்தப் பெண், ராமமூர்த்தி நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த மாதம் அவர் தங்கியிருந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். ஆரம்பத்தில் இது தற்கொலை என்று போலீசார் கருதினாலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

தொடர் விசாரணையில், அந்தப் பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த குரேசி என்ற 18 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். அந்தப் பெண் தன்னைப் பார்த்துப் புன்னகைத்ததை தவறாகப் புரிந்துகொண்ட குரேசி, அவர் தன்னைக் காதலிப்பதாகக் கருதியுள்ளார். சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த அவன், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான். இதிலிருந்து தப்பிக்கப் போராடிய பெண்ணை அவன் கீழே தள்ளியதில், சோபாவில் தலை மோதி அவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஊசலாடியுள்ளார்.

குரூரத்தின் உச்சமாக, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதோடு, அவர் உயிரிழந்த பிறகும் தனது வக்கிர புத்தியை மாற்றிக் கொள்ளாமல் நடந்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆதாரங்களை மறைப்பதற்காக அந்தப் பெண்ணின் ஆடைகளை மாற்றியதோடு, படுக்கையறைக்கு தீ வைத்தும் நாடகமாடியுள்ளான். இறுதியில் அந்தப் பெண்ணின் செல்போனைத் திருடிச் சென்றதே, கொலையாளியான இந்த மாணவனைப் போலீசாரிடம் சிக்க வைத்துள்ளது. சமூகத்தில் பெருகிவரும் இத்தகைய பாலியல் வக்கிரங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

25 seconds ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

7 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

14 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

16 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

16 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

19 minutes ago