தமிழகத்தில் இந்த 4 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு… காலையிலேயே வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்..!!

By Soundarya on புரட்டாதி 1, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 78 சுங்க சாவடிகள் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

கார் ஜீப் போன்றவை ஒரு முறை பயணிப்பதற்கு கட்டணத்தில் மாற்றமில்லை. இருமுறை பயணித்தால் கட்டணத்தில் ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணத்தில் 70 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய பதினைந்து ரூபாயும், இரண்டு முறை பயணிக்க 20 ரூபாயும், மாதாந்திர கட்டணத்தில் 395 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.