மகளிர் உரிமைத்தொகை: ரூ.1000 விடுபட்டவர்களுக்கு குட் நியூஸ்… தமிழக அரசு புதிய தகவல்..!

By Soundarya on புரட்டாதி 1, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமை தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில்  விடுபட்டவர்களில், தகுதியானவர்கள் குறித்து தீபாவளிக்கு முன்னதாக அறிவிப்பு வெளியாகலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் தகுதியானவர்களின் முதல் பட்டியல் வெளியாகும் என்றும், இவர்களுக்கு தீபாவளி பரிசாக வரும் அக்.15-ம் தேதி முதல் கட்டமாக பணம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது