நீட் தேர்வுக்கான கட்டணம்.. திருப்பி வாங்கிக்கொள்ள வெளியானது இணையதள லிங்க்… இதோ பயன்படுத்திக்கோங்க..!!

Spread the love

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்ட நீட் யுஜி (NEET UG 2026) தேர்வுக்கான கட்டணத்தை, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் திரும்பப் பெறுவதற்கான புதிய வசதியைத் தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதற்கான பிரத்யேக லிங்க் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது நேரலையில் உள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தித் லாகின் செய்து, வங்கி கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவர் பெயர், வங்கியின் பெயர் மற்றும் ஐஎஃப்எஸ்சி (IFSC) கோடு ஆகியவற்றைத் துல்லியமாகப் பதிவிட வேண்டும் என்று NTA அறிவுறுத்தியுள்ளது. தவறைத் தவிர்க்க, விருப்பமிருந்தால் ‘கேண்சல் செய்யப்பட்ட செக்’ நகலையும் பதிவேற்றம் செய்யலாம்.

இந்தத் தேர்வு கட்டணத்தை ரீஃபண்ட் (Refund) செய்வதற்கான ஆன்லைன் காலக்கெடு மே 22 முதல் தொடங்கி, வரும் மே 27, 2026 (இரவு 11:50 மணி) வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள மறுதேர்வுக்கு மாணவர்கள் தனியாக எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும் NTA தெளிவுபடுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“பிலிங்கிட் ஆர்டர் செய்த முட்டையில் நெளிந்த புழுக்கள்…” மங்களூரு வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…

9 minutes ago

ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி…. அலறி அடித்த வியாபாரிகள்…! மும்பை ஸ்ட்ரீட் புட் உணவகங்களில் நடந்த அதிசயம்…!

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…

12 minutes ago

அடச்சீ… காதலனுடன் சுற்ற சொந்த மாமா வீட்டிலேயே… 5 லட்சம் நகை கொள்ளை… உல்லாச விடுதியில் ஜாலியாக… இருந்த காதலி அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…

14 minutes ago

அடப்பாவி… காதலிக்கு பிறந்தநாள் கிஃப்ட் ஐபோனா?… இல்ல ஜெயிலா?… 12 கிலோ கஞ்சாவுடன் பைக்கில் பறந்த… இளம் ஜோடிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த…

24 minutes ago

“ஒரு பைசா கூட விடல…” சேற்றில் புதைந்த லட்சக்கணக்கான ரூபாய் பணம்…! உரியவரிடம் ஒப்படைத்த மீட்பு குழு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

நேபாள நாட்டில் வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த தேசமே பெரும் துயரத்திலும் பேரழிவிலும் மூழ்கியுள்ளது. ஆயிரக்கணக்கான…

29 minutes ago