மக்களே சூப்பர் திட்டம்…! ரூ.2 லட்சத்திற்கு ரூ.30,000 வட்டி கிடைக்கும்… உடனே போஸ்ட் ஆபீஸ் கிளம்புங்க..!!

By Soundarya on ஆனி 10, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையை சேமிக்க விரும்புகிறார்கள். இதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தபால் நிலையத்தில் டைம் டெபாசிட் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு  FD திட்டத்தை போலவே ஒரு சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 100% பாதுகாப்பானது. இதில் நியாயமான வட்டி கொடுக்கப்படுகிறது. ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கால அவகாசம் கொண்ட நிரந்தர வைப்புத் தொகை விருப்பு தேர்வுகள் தபால் நிலையங்களில் கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் கால அளவை பொருத்தும் மாறுபடும். வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்ய விரும்பினால் நிரந்தர வைப்பு தொகை விருப்ப தேர்வு செய்யலாம்.

ஐந்து வருட நிரந்தர வைப்பு தொகை முதலீட்டை மேலும் 3 மடங்காக உயர்த்தும். முதலீட்டாளர்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்தாலும் வட்டியில் இருந்து மட்டுமே இரட்டிப்பு தொகையை பெற முடியும். இந்த திட்டமானது வங்கி எப்படி திட்டத்தை போலவே செயல்படும். தற்போது இரண்டு வருட திட்டத்திற்கு ஏழு சதவீதம் வட்டியும் கொடுக்கப்படுகிறது. இரண்டு வருடத்திற்கு இந்த திட்டத்தில் இரண்டு லட்சம் ரூபாய் வைப்பு செய்தால் முடிவில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 776 கிடைக்கும். இதில் 29 ஆயிரத்து 776 என்பது வட்டி. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை ஆயிரம் ரூபாய். அதிகபட்ச வரம்பு கிடையாது. வட்டி வருவாய் வருடாந்திர அடிப்படையில் இயங்குவதால் 100% பாதுகாப்பானது. இந்த திட்டத்தை தொடங்குவதற்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு செல்லவும். பான் கார்டு, அடையாள அட்டை, புகைப்படம் உள்ளிட்டவை தேவை.