இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மோசடி என்பது தற்போது அதிகமாகவே உள்ளது. மக்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருவதால் அவர்களுக்கு ஏற்றது போல போலி மெசேஜ் மூலமாக தொடர் மோசடிகள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்படியான நிலையில் டெலிகிராமில் வேலைவாய்ப்பு மற்றும் முதலீடு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய மோசடிக்காரர்கள் முதலில் சிறிய தொகையை செலுத்த சொல்லி உங்களுடைய நம்பிக்கையை பெறுவார்கள். அதன் பிறகு ஒரு பெரிய தொகையை கையாடல் செய்து விடுவார்கள். இதனை நம்பி ஒருபோதும் பணம் அனுப்ப வேண்டாம் என்று போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
