சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் 16 வயது சிறுமியை அவரது சொந்த தந்தையே தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்த அந்த நபர், மகளை அச்சுறுத்தி இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். முதல்முறை சிறுமி கர்ப்பமடைந்த போது அத்தையுடன் சேர்ந்து கட்டாயக் கருக்கலைப்பு செய்த தந்தை, மீண்டும் அச்சிறுமி கர்ப்பமானதும் போலி அடையாள ஆவணங்களை தயார் செய்து அவருக்கு திருமணமாகிவிட்டதாக நாடகமாடியுள்ளார். பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த ஆண் குழந்தையை, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களின் உதவியுடன் சட்டவிரோதமாக விற்பனையும் செய்துள்ளார்.
இந்த தொடர் கொடுமைகளைத் தாங்க முடியாத அந்தச் சிறுமி, சமூக வலைத்தளத்தின் வாயிலாகத் தனது தாயைத் தொடர்புகொண்டு நடந்தவற்றைக் கூறியதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடனடியாக தாய் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் விளைவாக, குற்றமிழைத்த தந்தை, உடந்தையாக இருந்த அத்தை, போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கியவர் என மொத்தம் 8 பேரை போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…
புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல 'ஜகதம்பா' உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…