உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், கௌரவக் கொலை என்ற பெயரில் தந்தை ஒருவரே தன் சொந்த மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கைர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பூரன் என்ற நபர், தனது 19 வயது மகள் பக்கத்து வீட்டு இளைஞனை ஓராண்டாகக் காதலித்து வந்ததை எதிர்த்துள்ளார். அந்தப் பெண் அதே இளைஞனைத் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததோடு, கடந்த ஒரு வாரமாக உணவருந்தாமல் பிடிவாதம் பிடித்துள்ளார். இதனால் தனது குடும்பக் கௌரவத்திற்குப் பங்கம் ஏற்படும் என்று கருதிய தந்தை, மகளைக் கொடூரமாகக் கொலை செய்யத் துணிந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று நள்ளிரவில் மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற பூரன், விடிவதற்குள் உடலைத் தனது முதுகில் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் விவசாய நிலத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு ஐந்து அடி ஆழப் பள்ளம் தோண்டி உடலைப் புதைத்துவிட்டு, ஒன்றும் அறியாதது போல் வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் மகள் மாயமானது போல் நாடகமாடி, அவளைத் தேடுவது போல் நடித்துள்ளார். ஆனால், அப்பகுதி மக்கள் பெண்ணின் காணாமல் போனது குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சந்தேகத்தின் பேரில் போலீசார் தந்தையிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் போலீசாரின் சந்தேகம் வலுக்கவே, தீவிர விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, இறந்த பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட பூரன் காட்டிய இடத்திற்குச் சென்று, புதைக்கப்பட்ட பெண்ணின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…
தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவருடைய மனைவி தனலட்சுமி…