“உன் மகன் உன்னை போல் இல்லை “… நண்பர்கள் செய்த கிண்டல்… மகனை ஆற்றில் தள்ளி நாடகமாடிய தந்தை… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

Spread the love

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், தன் மகனை கிருஷ்ணா ஆற்றில் வீசி ஒரு தந்தை கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாகதானாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் அரகேரி என்பவர், தனது மனைவி பாக்கியஸ்ரீயின் நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்தார். மேலும், தனது மகன் சித்தார்த் தன்னைப்போல் இல்லை என்று நண்பர்கள் கேலி செய்ததால் ஆத்திரமடைந்த மல்லிகார்ஜுன், கடந்த மார்ச் 16 அன்று மகனைப் பள்ளியில் சேர்ப்பதாகக் கூறி அழைத்துச் சென்று ஆற்றில் வீசியுள்ளார்.

இந்தக் கொடூரச் செயல் நடந்து பல நாட்களாகியும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஏப்ரல் 1-ஆம் தேதி மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, சிறுவனை வீட்டிற்கு அழைத்து வருமாறு மனைவி பாக்கியஸ்ரீ தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். சில நாட்கள் மல்லிகார்ஜுன் சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென அவர் தலைமறைவானார். இதனால் சந்தேகம் அடைந்த பாக்கியஸ்ரீ, அவர் குறிப்பிட்ட பள்ளிக்குச் சென்று விசாரித்தபோது தன் மகன் அங்கு சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, தனது கணவர் மற்றும் மகன் காணாமல் போனது குறித்து பாக்கியஸ்ரீ விஜயபுரா கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், தந்தை மல்லிகார்ஜுன் சந்தேகத்தின் பேரில் தனது சொந்த மகனையே ஆற்றில் வீசிக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது தலைமறைவாக உள்ள மல்லிகார்ஜுனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago