திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியார்பட்டி சுடுகாட்டுப் பகுதியில் கடந்த மே 22-ஆம் தேதி (வியாழக்கிழமை) கன்னிவாடியைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் பாலசுப்ரமணி (48) என்ற டிரைவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப், டிஎஸ்பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் கன்னிவாடி சார்பு ஆய்வாளர் சிவராமன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளைத் தேடி வந்தனர்.
காவல் துறையினரின் தீவிர விசாரணையில், கன்னிவாடி ரெட்டியார்பட்டி காலனியைச் சேர்ந்த காசிராஜா (42), அவரது மகன்கள் சஞ்சய் (20), மனோஜ்குமார் (21) மற்றும் வாடிப்பட்டி தாலுகா கச்சிராயிருப்பு பகுதியைச் சேர்ந்த உறவினர் ஜானகிராமன் (25) ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது. உடனே அவர்களைப் பிடித்து போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணிக்கும், காசிராஜாவின் மனைவி மருதாயம்மாளுக்கும் இடையே நீண்ட நாட்களாக திருமணத்தை மீறிய கள்ளக்காதல் உறவு இருந்து வந்ததே இந்த கொலைக்கு முக்கியக் காரணம் என்பது தெரியவந்தது.
சம்பவத்தன்று நள்ளிரவில் காசிராஜன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென தண்ணீர் குடிப்பதற்காக எழுந்துள்ளார். அப்போது வீட்டில் தனது மனைவி மருதாயம்மாள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே தனது மகன்களுடன் சேர்ந்து தேடிப் புறப்பட்டுள்ளார். வீட்டின் வெளியே எங்கும் காணாததால், பாலசுப்பிரமணியத்தின் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு பாலசுப்பிரமணியமும், மருதாயம்மாளும் தனிமையில் உல்லாசமாக இருந்ததைக் கண்டு கணவனும் மகன்களும் கடும் ஆத்திரமடைந்தனர். உடனடியாக காசிராஜன் தனது உறவினரான ஜானகிராமனுக்குத் தகவல் தெரிவிக்க, அவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்பிரமணியத்தைத் தீர்த்துக்கட்ட ஆலோசனைக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, நால்வரும் சேர்ந்து பாலசுப்பிரமணியத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ரெட்டியார்பட்டி சுடுகாட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே தகராறு முற்றவே, ஜானகிராமன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் பாலசுப்பிரமணியத்தைத் தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த பாலசுப்பிரமணியம் தற்காப்புக்காக அவர்களைத் திருப்பித் தாக்கியதால், மேலும் ஆத்திரமடைந்த நால்வரும் சேர்ந்து அருகில் கிடந்த நில அளவைக் கல்லை (சர்வே கல்) தூக்கி பாலசுப்பிரமணியத்தின் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர், கொலையை மறைப்பதற்காக அந்தச் சர்வே கல்லை அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். தற்போது இந்த நான்கு பேரையும் கைது செய்த கன்னிவாடி போலீசார், ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதல் தகராறில் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனித உருவில் வந்த அரக்கனான வளர்ப்புத் தந்தையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த…
மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்…
டெல்லி மாளவியா நகரிலுள்ள 'புளோரிஷ் ஸ்டே' (Flourish Stay) என்ற விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குருகிராமைச் சேர்ந்த…
இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வெறும் சில லைக்குகளுக்காகவும் (Likes), தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் பலரும்…
சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் (Town Planning Department) நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட…
ஓமலூர் TVK வேட்பாளர் அதியமான், சேலம் மேற்கு TVK MLA லட்சுமணன் வாக்காளர்களுக்கு ₹2,000 கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றார்…