ஒழுங்கா பாத்துக்கலையா?… மாமியார் படுத்த படுக்கை… மாமனாருக்கு கத்தி குத்து… அலறியோடிய நோயாளிகள்… அரசு ஆஸ்பத்திரியில் ரத்தக் களறி…!!

By Gayathri on ஐப்பசி 20, 2026

Spread the love

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மனைவி உடல்நலக் குறைவு காரணமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வடிவேலுக்கும் அவரது மருமகனான ஆரோக்கியம் என்பவருக்கும் இடையே ஏற்கனவே குடும்பப் பிரச்சினை மற்றும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், மருத்துவமனையில் உள்ள மாமியாரை முறையாகப் பராமரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் மூண்டது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஆரோக்கியம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமனார் வடிவேலைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயமடைந்த வடிவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த மருத்துவமனை ஊழியர்களும் பொதுமக்களும் அவரை மீட்டு, அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

   

மருத்துவமனை வளாகத்திலேயே பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கரத் தாக்குதலைக் கண்டு நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோட முயன்ற மருமகன் ஆரோக்கியத்தை அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிகழ்ந்த இந்த கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.