டெல்லி ஜாமா மஸ்ஜித் மெட்ரோ நிலையத்தில், சாமான்களைச் சோதனை செய்யும் ஸ்கேனரில் சந்தேகத்திற்குரிய பொருள் சிக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட முயன்ற பயணியைச் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் மின்னல் வேகத்தில் துரத்திப் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த அக்டோபர் 17 அன்று வழக்கமான பரிசோதனையின் போது, பயணியின் பையில் இருந்த எக்ஸ்-ரே ஸ்கேனர் திரையில் அடர்த்தியான சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று பதிவானது. மேற்கொண்டு சோதிக்கக் காத்திருக்காமல் அந்த நபர் அங்கிருந்து திடீரென ஓட்டம் பிடித்த நிலையில், உடனடியாகச் செயல்பட்ட சிஐஎஸ்எஃப் அதிகாரி பின்தொடர்ந்து சென்று அவரை வெளிப்பகுதியில் மடக்கிப் பிடித்தார். பாதுகாப்புக் கெடுபிடிகளை மீறித் தப்பிக்க முயன்ற இந்தச் சம்பவம் டெல்லி மெட்ரோ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
