“க்யூஆர் கோட் மேஜிக்…” சிட்டாக பறந்த பெண்கள்… கடை ஓனருக்கு ஷாக்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 20, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், இரண்டு பெண்கள் க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்துவது போலப் போலி போட்டோவைக் காட்டி ஏமாற்றிச் சென்ற நூதனச் சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கோரக்பூர் சாவித்ரி மருத்துவமனை அருகே உள்ள துணிக்கடைக்கு வந்த இரு பெண்கள், துணிகளைத் தேர்வு செய்த பிறகு கூகுள் பே க்யூஆர் கோடை தமது செல்போனில் படம் பிடித்துள்ளனர். பின்னர் பணத்தை அனுப்பாமல், ஏற்கனவே தங்களது போனில் இருந்த வேறு ஒரு பேமெண்ட் ரசீது போட்டோவைக் கடை ஊழியர்களிடம் காட்டியுள்ளனர்.

   

அதோடு, “நேரமாகிவிட்டது” என நெளிவாகப் பேசி ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இவர்களின் இந்த கைவரிசை முழுவதும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், கடை உரிமையாளர் பிரதிபா திரிபாதி இந்த வீடியோவை வெளியிட்டு டிஜிட்டல் மோசடிகள் குறித்து வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.