அடிக்கடி ஒரே சண்டை… காதல் மனைவியை கூப்பிட சென்ற கணவர்… தலையில் கல்லை போட்டு கொலை செய்த மாமனார்… குமரியே ஆடிப்போச்சு..!!

By Soundarya on ஆவணி 22, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே தன்னுடைய காதல் மனைவியை அழைத்து செல்வதற்கு வந்த மருமகனை மாமனார் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிபின் .  25 வயதான இவர் ஞானசேகரன் என்பவருடைய மகளை காதலித்து திருமணம் செய்துள்ளார் . இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் கோபத்தில் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார் சிபின். அப்பொழுது மாமனார் ஞானசேகரன் மாடியில் இருந்து ஹாலோ பிளாக் கல்லை சிவின் தலையில் தூக்கி போட்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த சிபினை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .இந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.