பகீர்… கல்லூரிக்குச் சென்று மகளைக் கொடூரமாகக் குத்திய தந்தை… ரூ 40 லட்சம் பணப் பேராசையால்… பெங்களூருவில் பேராசிரியைக்கு நேர்ந்த கொடூரம்…!

By Swetha on ஆடி 31, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் லட்சுமி துர்கா என்பவரை, அவரது தந்தை நாகேந்திரா கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 25 அன்று மதியம் சுமார் 3:00 மணியளவில் கல்லூரிக்கு வந்த நாகேந்திரா, துறைத் தலைவரின் அறையில் இருந்த தன் மகளை வயிறு, நெஞ்சு மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் கத்தியால் கொடூரமாகக் குத்திவிட்டுத் தப்பிச் சென்றார். பலத்த காயமடைந்த லட்சுமி துர்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் தாக்குதலுக்குக் குடும்பத்தில் நிலவி வந்த பணத் தகராறே காரணம் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. வாடகைக்கார் ஓட்டுநராகப் பணிபுரியும் நாகேந்திரா, தனது மகளுக்குத் திருமணம் பேசப்பட்டபோது, மாப்பிள்ளை வீட்டாரிடம் ரூ40 லட்சம் கேட்டுள்ளார். மகளின் படிப்புக்கும் வளர்ச்சிக்கும் தான் அதிக பணம் செலவழித்துள்ளதாகக் கூறி இத்தொகையைக் கோரியதுடன், லட்சுமி துர்காவின் மாதாந்திரச் சம்பளத்தையும் தனக்கே தர வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.

   

தந்தையின் இந்தக் கோரிக்கைகளுக்கு லட்சுமி துர்காவும் அவரது தாயாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி வாக்குவாதங்களும் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளன. இதன் ஆத்திரத்திலேயே நாகேந்திரா கல்லூரிக்கே சென்று மகளைக் கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த நாகேந்திராவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.